பொலிஸ் சேவை பல சவால்களை எதிர்கொண்டுள்ளது!

பாரம்பரிய சம்பிரதாயபூர்வ நிகழ்வுகளுக்கு மாத்திரம் ஆரம்ப காலத்தில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் சேவை, தற்போது பல சவால்களை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் நேற்று கொண்டாடப்பட்ட இலங்கை பொலிஸின் 150ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு செயற்றிறன் உடைய சேவைகளை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் பொறுப்பு அனைவருக்கும் உண்டென பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு, தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய இலங்கையிலுள்ள பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை மேலும் 150ஆல் அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Comments