அதற்காக மட்டும் இவ்வளவு செலவு செய்தாரா மஹிந்த?

மகிந்தவின் முக்கிய செலவுகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்து தெரிவித்துள்ளார்.

அதாவது,  கடந்த கால ஆட்சியில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு சுற்றுலாவுக்காக 108 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போது பிரதமர் இந்த தகவலை வெளியிட்டார்.

கடந்த காலங்களில் 86 சுற்றுலாக்கள் அமைச்சர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்காக 81 மில்லியன் ரூபா நிதி செலவு ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 வெளிநாட்டு சுற்றுலாக்களை மேற்கொண்டுள்ளனர். இதற்காக 27 மில்லியன் ரூபா நிதி செலவு ஏற்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.

அறிக்கை ஒன்றின் மூலம் இந்த தகவல்களை பிரதமர் வெளிப்படுத்தியிருந்தார்.

இதனை மகிந்த ஏற்றுக்கொள்வரா இல்லையா என்பதனை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

Comments