.ஜமாத்-இ- இஸ்லாமி கட்சி தலைவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்



வங்காளதேசத்தில், 1971 போர் குற்ற நடவடிக்கை வழக்கில் ஜமாத்-இ- இஸ்லாமி கட்சி தலைவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வங்காளதேசத்தில் உள்ள எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஐமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் குவாசிம் அலி. இவர் மிகப்பெரும் கோடீசுவரர்.

பாகிஸ்தானில் இருந்து பிரிந்த போது கடந்த 1971-ம் ஆண்டு வங்காளதேச சுதந்திர போராட்டத்தின் போது போர்க்குற்றம் இழைத்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. எனவே அவர் மீது சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு அவர் குற்றவாளி என அறிவித்து தூக்கு தண்டனை விதித்தது. அதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அங்கும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டு தண்டனை உறுதி ஆனது.

எனவே அவர் காசிம்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் இறுதியாக ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்து அதன் மூலம் தண்டனை குறைய வாய்ப்பு இருந்தது. ஆனால் குவாசிம் அலி ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோர விரும்பவில்லை என நேற்று அறிவித்து விட்டார். அதனால் அவர் தூக்கில் போடப்படுவது உறுதியாகி இருந்தது.

இந்நிலையில், ஜமாத்-இ- இஸ்லாமி கட்சி தலைவர் குவாசிம் அலிக்கு நேற்று இரவு தூக்கு தண்டனை நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

டாக்காவிற்கு புறநகரில் உள்ள கஷிம்பூர் மத்திய சிறையில் இரவு 10.30 மணியளவில் தூக்கு தண்டனை நிறைவேற்றம் செய்யப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை மந்திரி அசாதுசமன் கான் தெரிவித்தார்.

தூக்கு தண்டனை நிறைவேற்றத்திற்கு முன்பாக குவாசிமை பார்ப்பதற்கு அவரது உறவினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி அவரது 22 உறவினர்கள் சிறைக்கு சென்றனர்.

Comments