வசீம் தாஜுடீனின் கொலை சந்தேகநபரும், நாற்றமடிக்கும் நீதியும்..!

ரகர் வீரர் வசீம் தாஜுடீனின் கொலை சந்தேகநபரான முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க எவ்வித காரணங்களும் இன்றி தேசிய வைத்தியசாலையில் தங்கியிருப்பதாக வைத்தியசாலை அறிக்கைகள் நீதிமன்றிட்கு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கொலை வழக்கில் அநுர சேனநாயக்க கைதுசெய்யப்பட்டு சிறிது நாட்களில் இருந்தே தேசிய வைத்தியசாலையில் தங்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தொடர்பில் முறைப்பாட்டாளர்கள் தெரிவித்து வரும் எதிர்ப்பு நடவடிக்கையினை கருத்திற் கொண்டு அநுர சேனநாயக்கவின் நோய் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் தேசிய வைத்தியசாலையிடம் கோரியிருந்தது.

நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய சந்தேகநபர் எவ்வித வைத்திய காரணங்களும் இன்றி அநுர சேனாநாயக்க வைத்திய சாலையில் தங்கியிருப்பதாக தொடர்பான அறிக்கையினை தேசிய வைத்தியசாலை நீதிமன்றதுக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments