இப்படியும் பிள்ளைகளா?
காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையின் நோயாளிகளுக்கு தங்கி சிகிச்சை பெற அனுமதி வழங்கும் இடத்தில் 88 வயதான முதியவரை எவரோ அழைத்து வந்து கைவிட்டுச் சென்றுள்ளனர்.
இறுதியில் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் முதியவரை வைத்தியசாலை விடுதியில் சேர்த்துள்ளார்.
தனது பெயர் சாலிஸ் எனவும் கிராமம் பத்தேகம எனவும் நெலுவ பிரதேசத்தில் தொழில் புரிந்ததாகவும் தனக்கு 4 பெண் பிள்ளைகள் இருப்பதாகவும் 88 வயதான இந்த முதியவர் கூறியுள்ளார்.
மேலும் தனது காணி ஒன்று தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
வழக்கு தொடர்பான ஆவணங்களுடன் அக்குரெஸ்ஸ பிரதேசத்தில் பேருந்து ஏறியதாகவும் பேருந்தில் இருந்த எவரோ ஆவணங்கள் இருந்த பொதியை திருடி விட்டதாகவும் முதியவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தன்னை வைத்தியசாலைக்கு அழைத்து வந்து விட்டுச் சென்றவர் யார் என்பது தனக்கு நினைவில் இல்லை என்றும் முதியவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், தனது வீட்டில் வைபவம் ஒன்று நடப்பதாகவும் இதனால், எவரோ தன்னை வாகனத்தில் ஏற்றி வந்து வைத்தியசாலையில் விட்டுச் சென்றதாக முதியவர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவரை பார்க்க சென்றிருந்த இரண்டு பேரிடம் கூறியுள்ளார்.
தனக்கு நான்கு பிள்ளைகள் இருப்பதாக தெரிவித்தும் ஒருவர் கூட தந்தை மீது அக்கறை இல்லாமல் போனமை மிகவும் கவலையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment