அடுத்த வருடம் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை!

அடுத்த வருடம் பிரஜைகளின் சகல தகவல்களும் அடங்கிய டிஜிட்டல் அடையாள அட்டை  ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.

இந்த அடையாள அட்டைகள் பிரதேச செயலாளர் காரியாலயங்கள் ஊடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரஜைகளின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அரச நிறுவனங்களுடனான அவர்களின் செயற்பாடுகள் உள்ளிட்ட தகவல்கள் இந்த அடையாள அட்டைகளில் உள்ளடக்கப்படும்.

அத்துடன் 17 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் இந்த டிஜிட்டல் அட்டைகள் வழங்கப்படவுள்ளன என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

Comments