சுண்டிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து மீட்கப்பட்ட கிபிர்க் குண்டு!

கிளிநொச்சி – சுண்டிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து, கிபிர்க் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று  இவ்வாறு இந்த கிபிர்க் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், மற்றும் விசேட அதிரடிப்படையினர், குண்டை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட குண்டு,  6 அடி நீளமும் 300 கிலோ கிராம் எடை கொண்டதுமாகும் என விசேட அதிரடிப்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும் குறித்த குண்டு வெடிக்காத நிலையில் செயலிழந்துள்ளது

இதனை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் நோக்கில் அதிரடிப்படையினர் அதனை மீட்டுச் சென்றுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

Comments