எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை!

தற்போதைய அரசாங்கம் எந்தவொரு அபிவிருத்தி வேலை திட்டமும் இல்லாமல் அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் முடக்கியுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் இதனை குருநாகலில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

“தற்போது நகர அபிவிருத்தி அமைச்சர்களாக நான்கு பேர் உள்ள போதிலும் தாம் முன்னெடுத்த திட்டங்களின் மிகுதியை கூட நிறைவுசெய்யவில்லை.

அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிடின் பணிகளை அவர்கள் முன்னெடுக்க மாட்டார்கள். தீர்மானம் எடுக்கும் திறன் இருக்க வேண்டும்.

சில தீர்மானங்களை எடுக்கும் அதிகாரிகள் பிரச்சினைகளை எதிர்நோக்கும் போது நாம் ஏன் தீர்மானம் எடுக்க வேண்டும் என தற்போதுள்ள அதிகாரிகள் நினைப்பார்கள். இதன்காரணமாகவே தற்போது பணிகள் முடக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டார்.

Comments