நீர்வேலி இரட்டைக் கொலைக்கான தீர்ப்பு இன்று!

நீர்வேலி இரட்டைக் கொலை வழக்கில் விசாரணைகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரட்டைக் கொலை வழக்கு குறித்து மேலதிகமாக தெரிவிக்கையில்,

இந்த இரட்டைக் கொலை வழக்கு தொடர்பான விசாரணை நேற்று எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஏற்கனவே முடிவுற்றுள்ள சாட்சியங்கள் விசாரணைகளின் அடிப்படையில் அரச தரப்பு சட்டத்தரணி மற்றும் எதிர்த்தரப்பு சட்டத்தரணி ஆகியோர் தமது தொகுப்புரைகளை நிகழ்த்தியுள்ளனர்.

இந்த தொகுப்புரைகளை செவிமடுத்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இந்த வழக்கிற்கான தீர்ப்பை இன்று வழங்குவார் என தெரிவித்துள்ளார்.

Comments