திருகோணமலையில் பதினான்கு வயது சிறுமியின் கையைப்பிடித்தவர் விளக்கமறியலில்

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினான்கு வயதுடைய சிறுமியொருவருக்கு கையைப்பிடித்த நபயொருவரை அடுத்தமாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.எச்.விஸ்வானந்த பெர்ணாண்டோ இன்று புதன் கிழமை(28) உத்தரவிட்டார்.

சமூத்திரகம,திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் சிறுமியின் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சென்று சிறுமியின் கையைப் பிடித்ததாக சிறுமியின் பெற்றோர் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுகமைய நேற்று செவ்வாய்கிழமை(27) கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Comments