விசித்திரத் தோற்றம் கொண்ட மான்

மான்களில் சில வகை கொம்பு மான்களும், புள்ளியில்லாத மான்களைக்கூட நாம் அறிந்திருப்போம். ஆனால் இந்த வகையான மான்கள் வித்தியாசமான தோற்றத்தைக் கொண்டது. யானை மூக்கு போல் மான்கள் இருந்தால் எப்படி இருக்கும் ?…
இருந்தால் என்ன இதோ இருக்கிறது பாருங்கள்…
16 saiga antelope
ஆண்ட்டிலோப் என்பது மாடு, காட்டெருமை ஆகியவற்றில் சேர்த்தியில்லாத, ஆடு வகைகளிலும் சேர்த்தியில்லாத ஒருவகை விலங்கினம்… இதன் தோற்றத்தைக்கொண்டு இந்த விலங்கு மான் என்றே அழைக்கப்படுகிறது.
ஆண்ட்டிலோப் விலங்கினத்தில் பலவகை இருந்தாலும் யானையின் தும்பிக்கை போன்ற மூக்கை உடைய இந்த ஆண்ட்டிலோப்பின் பெயர் சாய்கா.
14 Saiga
இந்த சாய்கோ ஆண்ட்டிலோப் ஒரு காலத்தில் மங்கோலியாவிலும், வட அமெரிக்காவிலும் வாழ்ந்திருந்தாலும் இப்போது இந்த இனம் இருப்பது ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் மங்கோலியாவின் சில பகுதிகளில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சாய்கா ஆண்ட்டிலோப் 2,50,000 வருடங்களுக்கு முன்பே, சேபர் டூத் புலி மற்றும் மம்மூத் யானைகளுடன் வாழ்ந்த மிகப் பழமையான உயிரினம் என்றும் ஒரு அறிவியல் கூற்று நிலவுகிறது.
தோள் வரையிலான உயரம் 2அடி முதல் 3அடி வரை வளரக்கூடியதும், 36 முதல் 63கிலோ எடை வரையில் வளரக்கூடியதும், 6முதல் 10ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியதுமான இந்த வகை ஆண்ட்டிலோப்கள் இப்போது மிக வேகமாக அழிந்து வரும் இனத்தில் பட்டியலிடப்பட்டிருப்பது காலத்தின் சோகம்தான்…!

Comments