மனித உரிமைகள் ஆணையாளர் – மங்கள சந்திப்பு!
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்த இருவரும் நியூயோர்க் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தற்போதைய நிலைமைகள் அபிவிருத்திகள் குறித்து வெளிவிவகார அமைச்சர், சயிட் அல் ஹூசெய்னுக்கு விளக்கமளித்துள்ளார்.
குறிப்பாக நல்லிணக்க முனைப்புக்களின் முன்னேற்றம் குறித்து சந்திப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை விவகாரம் பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment