நம்பிக்கை கொள்ளுங்கள் நல்லாட்சித் தலைவரே!

22 வருடங்களுக்கு மேல் எமது வாழ்க்கை இன்று சிறையிலா? சமூகப் பிரச்சிணைக்காக சிறை சென்று இருப்பவர்களை அரசியல் தீர்மானம் எடுத்து நல்லாட்சி அரசாங்கம் விடுதலை செய்யவேண்டும் என்ற பல கோரிக்கைகளை முன்வைத்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

சர்வதேச கைதிகள் தினத்தை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி இன்று, இப்போராட்டம் இடம்பெற்றுவருகின்றது.

மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் என்.சகாயம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

கடந்த காலத்தில் நீதித்துறையால் வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு நிவராணங்கள் வழங்கிய கூட்டரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளை மட்டும் பாராமுகமாக நடத்துவது ஏன், உண்ணாவிரதங்களின் போது அள்ளியிறைக்கப்பட்ட அரசின் வாக்குறுதிகள் அர்த்தமற்றுப்போனது ஏன்?

சொந்த நிலத்தில் சுகமாகவும், சுதந்திரமாகவும் வாழ்ந்த தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் இன்று வீதியில் இறங்கி விடுதலைக்காக கோசமிடும் போது நல்லிணக்கம் சமத்துவம் சாத்தியமா?

மனித நேயம் மிக்க ஐனாதிபதி அவர்களே! மரணத்துடன் போராடும் கைதிகளின் மறுவாழ்வுக்காக மக்கள் நாம் மன்றாடுகின்றோம், புனர்வாழ்வு அளித்தேனும் பிள்ளைகளை விடுங்கள் இவர்கள் நாளைய இந்நாட்டின் நற்பிரஜைகளே நம்பிக்கை கொள்ளுங்கள் நல்லாட்சித் தலைவரே! என்றவாறான துண்டுப் பிரசுரங்கள் இதன்போது பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.

Comments