கதிர்காமத்தில் தாக்கப்பட்ட தேரர்!
கதிர்காமம் வல்லி குகை ரஜமகா விகாரையின் விகாராதிபதி ரம்புக்வெல்ல சங்கானந்த தேரர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று மாலை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லையெனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
விகாரைக்குள் புகுந்த இனந்தெரியாத குழுவினர் கூரிய ஆயுதங்களை கொண்டு தேரரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Comments
Post a Comment