எட்கா ஒப்பந்தம் குறித்த இரண்டாம் கட்டப் பேச்சு இன்று!
இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான செய்து கொள்ளப்படவுள்ள எட்கா ஒப்பந்தம் குறித்த இரண்டாம் கட்ட பேச்சு இன்று இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டாம் கட்டப் பேச்சு இந்தியாவின் புது டெல்லியில் இடம்பெறவுள்ளதாக சர்வதேச வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த உடன்படிக்கை தொடர்பான முதற்கட்டப் பேச்சுக்கள் நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்றது.இந்த பேச்சுக்களை ஆரம்பிப்பதற்காக இந்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராம் கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்ததோடு, சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இந்த நிலையில் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தலைமையிலான குழுவொன்று எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Comments
Post a Comment