பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும்!

வட மத்திய, தென் மாகாணங்களிலும், மலையகத்திலும் அதிக காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வடமேல் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் இடைக்கிடையில் மழைபெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேநேரம் பிற்பகல் 2 மணிக்கு பின்னர், வடக்கு கிழக்கு ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், இதன் போது தற்காலிகமாக கடும் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இடிமின்னில்களில் இருந்து பொது மக்கள் தற்காத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments