இதுதான் நல்லாட்சி அறிமுகப்படுத்தும் புதிய காரும், விலையும்!

புதிதாக இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள, புதிய காரின் வடிவமும், அதன் விலையும் வெளிவந்துள்ளது.

முச்சக்கர வண்டிக்கு பதிலாக சிறிய ரக  வாகனத்தை இணக்கப்பாட்டு விலையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக நிதி அமைச்சர்  ரவி கருணாநாயக்க  சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,  தற்போது அந்த புதிய கார் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளதுடன் இதன் மதிப்பு  அமெரிக்க டொலர் 2000 ( இலங்கை ரூபா 3 இலட்சம் ) என தகவல் வெளியாகியுள்ளது.  எனினும் குறித்த காரின் விலையினை இன்னும் இலங்கை அரசாங்கம் தீர்மானிக்கவில்லை.

குறித்த காரில் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க முடிவதுடன் இதில் 5 பேர் பயணிக்க கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.  மேலும் 1 லீட்டர் பெற்றோலில் 36 கிலோ மீற்றர் பயணிக்க முடியும்.




Comments