காட்டுத் தீயை அணைக்க நீர் இல்லை!

பரவுகின்ற காட்டுத் தீயை அணைக்க நீரில்லாது இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனத்த முகாமைத்துவ மைய அதிகாரிகள் இதனை அறிவித்துள்ளனர்.

பெரகல வனப் பகுதியில் ஏற்பட்ட பாரிய தீயை அணைக்க வந்த பௌஸர்களுக்கு, நிரப்புவதற்கு நீர் இல்லாத நிலை காணப்படுகின்றது.

காற்று, சாய்வுப் பாங்கான பிரதேசம் போன்ற காரணங்களினால் காட்டில் பரவிய தீ, கட்டுப்பாட்டை இழந்து செல்வதாகவும் அவ்வதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Comments