வெளிவந்தது மஹிந்தவின் புதிய சின்னம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கட்சியின் சின்னம் வெண்தாமரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களின் கூட்டமைப்பு இதனை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்தக்கட்டமாக கட்சியின் பெயர் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய கட்சி தொடர்பில் வெவ்வேறு வகையான கதைகளைக் கூறி, கட்சியை உருவாக்குவதை எவராலும் தடுக்க இயலாது என முன்னாள் பிரதேச சபைத் தலைவர் உதேனி அத்துகோரல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments