இன்று சூரியன் உச்சம் கொடுக்கும்!
இன்றைய தினம் சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஹொரனை, புலத்சிங்கள, ஓகந்தர, மொல்லியகொட மற்றும் பலாங்கொட ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு சூரியன் உச்சம் கொடுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று பகல் 12.09 மணியளவில் அதனை காணமுடியும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் இந்த மாதம் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையில் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கவுள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் மேல், சப்ரகமு, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யககூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Comments
Post a Comment