லசந்தவின்  படு கொலை கத்தியால் வெட்டப்பட்டதா?

ஊடகவியளாலர் லசந்த விக்ரமசிங்கவின் படு கொலை  செய்ய கொலையாளிகள்  கத்தியையே பயன்படுத்தியிருக்க வேண்டும் அதுவும் அப்போதைய ஆட்சியாளர்களின் கட்டளைப்படியே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் அப்படி கட்டளையிடும் அதிகாரம் முன்னைய ஜனாதிபதி மகிந்த மற்றும் அவரின் சகோதரர் கோத்தபாயவை தவிர வேறு யாரால் செயல் படுத்த முடியும் என சந்தேகம் வெளியிட்டுள்ளார்  பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கா.

நேற்று அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

முன்னைய ஜனாதிபதி மற்றும் அவரின் குடும்பங்கள் லசந்த விக்ரமசிங்க தாஜ்டீன் மற்றும் பாரதலக்மன் பிரேமசந்திரவின் கொலைகளில் தொடர்புபட்டுள்ளது தற்போது வெளியாகிவரும் விபரங்களில் இருந்து அறிய முடிகின்றது எனவும் குறிப்பிட்டார்.

இதன்போது ஊடகவியளாலர்களின் கேள்விக்கு பதில் தெரிவித்த அமைச்சர் லசந்தவின் உடலை மீள் பரிசோதனை நடாத்த நீதி மன்று உத்தரவுயிட்டது அவரின் மரணம் துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்டதென்பதை உறுதிபடுத்துவதில் ஏற்பட்ட முரன்பாடேயாகும் எனவும் குறிப்பிட்டார்.

Comments