ஜனாதிபதி பிரதமரினால் குழு நியமனம்



.RANIL11

அரசாங்கத்தின் ஒற்றுமையை உறுதி செய்து கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்ச ஆகியோரினால் குழுவொன்று நியமிக்கப்பட உள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து இவ்வாறு குழுவொன்றை அமைக்க தீர்மானித்துள்ளனர்.
தலா ஐந்து பேரைக் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட உள்ளது. தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு ஓராண்டு காலப்பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமைகள் அடிக்கடி இரண்டு கட்சித் தலைவர்களிடமும் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இவ்வாறான ஓர் குழு அமைக்கப்பட உள்ளது. அரசாங்கமாக செயற்படும் போது இரண்டு தரப்பு அமைச்சர்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமைகள் ஏற்படுவது தேசிய அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மோசமாக பாதிக்கும் என்ற நிலைப்பாட்டையே இரண்டு கட்சிகளினதும் தலைவர்கள் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

Comments