ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்த சிரேஷ்ட உறுப்பினர்கள்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியிடம்   முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் அதன் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு எதிராகவே மீண்டும் ஒரு முறை, ஜனாதிபதியிடம் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்சியின் ஒற்றுமைக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், சிலர் உள்ளிருந்து கொண்டு ஊடகங்களுக்கு அறிவித்தல்களை விடுப்பதனால், முயற்சி பலனின்றி போவதாகவும் அவர்கள் ஜனாதிபதியிடம் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Comments