அரசாங்க மருத்துவமனையில் இறந்ததாக சான்றிதழ் கொடுத்த குழந்தை உயிர் பிழைத்த சம்பவம்...



இந்தியா, ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாசரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பவானி. நிறைமாத கர்ப்பிணியான இவரை பிரசவத்திற்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஆனால் சிறிது நேரத்தில் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். குழந்தையின் இறப்பு சான்றிதழையும் வழங்கினார்கள். பின்னர் குழந்தையை ஒரு துணியில் சுற்றி பவானியிடம் கொடுத்தனர். அவர் குழந்தையை நெஞ்சோடு அனைத்தபடி கதறி அழுதார்.

அப்போது குழந்தைக்கு திடீரென மூச்சு வந்தது. குழந்தையின் உடல் அசைந்தது. குழந்தை உயிருடன் இருப்பது தெரியவந்தது. உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து செயற்கை சுவாசம் அளித்தனர்.

குழந்தை அசைவற்று கிடந்த போது கார்டியாத் மசாஜ் செய்யாமலேயே குழந்தை இறந்து விட்டதாக கூறிய  மருத்துவர்களை கண்டித்து பெற்றோரும் உறவினர்களும் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்களை மருத்துவர்கள் சமரசப்படுத்தியுள்ளனர்.

Comments