குச்சவெளி கரடி மலையில் நிலைகொண்டுள்ள கடற்படையினரை அங்கிருந்து வெளியேற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை

கடந்த 1983ஆம் ஆண்டு குச்சவெளி போலீஸ் நிலையம் தமிழ் போராளிகளினால் தாக்கி அழிக்கப்பட்ட பின்னர் கடற்படையினரை அப்பிரதேசங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர் .

தற்போழுது சமாதானம் பிறந்து மக்கள் இயல்பு வாழ்வுக்குத்திரும்பி மீளக்குடியறி வரும் இந்நல்லாட்சியில் கடற்கரையினர் கரடிமலையில் நிலை கொண்டிருப்பது அவசியமற்றது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் .

மாரிக்காலம் கடல் அடிப்பதனால் கடலுக்குச்செல்லமுடியாது. அக்காலங்களில் இங்குள்ள தமிழ் முஸ்லீம் மீனவர்கள் இம் மலையில் நின்றுதான் சிறு மீன்பிடி தூண்டில் தொழில் செய்வார்கள் .

தங்களது வாழ்வாதாரத்துக்கு இடம் விட்டு இங்குள்ள படையினரை வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்

Comments