யுத்தத்தின்போது பிரபாகரன் அடையாள அட்டையுடன் சென்றாரா?

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அடையாள அட்டையைத் தாமே நினைவுப் பொருளாக எடுத்து வைத்திருப்பதாக, இறுதிக்கட்டப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்ற 53 ஆவது டிவிசனுக்கு தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றிடம் இந்த தகவலை அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பிரபாகரனின் உடல் தகனம் செய்யப்பட்டது. அதற்குப் பின்னர் நாம் அங்கிருந்து விலகி விட்டோம். அந்த இடத்தில் இருந்து நான் ஒரு நினைவுப் பொருளை எடுத்துக் கொண்டேன். பிரபாகரனின் அடையாள அட்டையே அது. அதனை நான் இன்னமும் வைத்திருக்கிறேன்.

வருங்காலத்தில் அதனை இராணுவ அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பேன் என்று நம்புகிறேன்.” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எப்படியிருப்பினும் நாட்டின் நீதியின் படி தமக்கு சொந்தம் அல்லா அடையாள அட்டையை வைத்திருப்பது பாரிய குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன் தனது தேசிய அடையாள அட்டையுடன் சென்றது என் ஏன் சந்தேகமும் தமிழ் மக்களிடம் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments