பணடாரநாயக்கவின் கொள்கை என்னிடம் மட்டுமே உண்டு!

பண்டார நாயக்கவின் கொள்கைகளுடன் தாமே  செயற்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

புதிய அரசியலமைப்பு மூலம் இன்று நாடு துண்டாடப்படவுள்ளதாகவும், 29,000 இராணுவத்தினர் உயிர் தியாகம் செய்து மீட்டெடுத்த நாட்டை பிரிப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தான் பதவியில் இருந்த போது இலங்கை வந்து பான் கீ மூன் எதுவுமே பேசாது சென்றார். ஆனால் இன்று வாய் திறந்துள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ச இதன்போது சுட்டிகாட்டியுள்ளார்.

நாடு, இனம், மதம் பற்றி அனைவரும் பெருமிதமாக பேசுவதற்கு இடம் இருக்கின்ற போதும், இன்று இனம் பற்றி ஏதாவது பேசினால் இனவாதியாக சித்தரிக்கப்படுவதாகவும், இதை பார்த்து சில புத்திசாலிகளும் அமைதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Comments