திருகோணமலையில் சிறுமியின் சடலம் ஒன்று மீட்பு!

இன்று திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாங்கேணி பகுதியில் 4 வயது சிறுமியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலம் நல்லூர்-நீலாங்கேணி பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் அஜந்தா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 9 மணியளவில், வீட்டிலிருந்த சிறுமி, காணாமல் போயுள்ளதாக தெரியவந்ததை அடுத்து தேடுதலில் ஈடுபட்ட கிராமமக்கள், காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலத்தை கண்டு, பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரனைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments