தொடரும் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்!
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தழிழ் அரசியல் கைதிகளால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் அரசியல் கைதிகள் 17 பேரும் கடந்த 21 ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தமது வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் வலியுறுத்தி கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Comments
Post a Comment