இனமத வாதமற்ற இலங்கையை கட்டியெழுப்புவோம் - ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அஹமட் புர்க்கான்


இனமத வேறுபாடுகளை கழைந்து ஒருமித்த நாட்டிற்குள் சகலரும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேணி நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

நபி இப்றாஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை இறைவன்  உலகம் அழியும் வரை நினைவு கூறுகின்ற, அன்னவர்களை கண்ணியப்படுத்துகின்ற இப்புனித தியாகத்திருநாளில் நாம் அனைவரும்  வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடனானவர்களாக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என புனித ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தில் அனைத்து இன மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும், அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான அஹமட் புர்கான் தனது ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் பிளவுபடாத ஒருமித்த நாட்டிக்குள் இன ஐக்கியத்தையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்டி நாட்டின் வளர்ச்சிக்கு நாம் எல்லோரும் ஒற்றுமைமையை வித்திட வேண்டியதொரு காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறோம்.அந்த வகையில் நாம் கடந்த கால கசப்பான விடயங்களை மறந்து மன்னித்து ஒருவரை ஒருவர் நேசிப்பவர்களாக மாறவேண்டும்.

நாட்டில்  தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வில் எந்தவொரு சமூகமும் புறக்கணிக்கப்படாத வகையில் தீர்வுகள் எட்டப்பட வேண்டும் எனவும் சகல இனங்களுடைய கலை,கலாச்சார, விழுமியங்கள் பேணப்படுகின்ற வகையில் அவரவர் சமூகம் சார்ந்த வணக்க அநுஷ்டானங்களை நிறைவேற்றுகின்ற பூரண சுதந்திரத்தையும் நீதித்துறை சுயாதீனமாக இயங்கும் வகையில் ஆளும் நல்லாட்சி அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் இந்த நாளில் அரசை வேண்டிக் கொள்வதோடு குறிப்பாக முஸ்லிம்கள் தேசிய ஒற்றுமைக்கு ஏனைய சமூகங்களுக்கு மத்தியில்  முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனவும் ஏனைய சமூகங்களுடன் நட்புறவை தொடர்ந்ததும் கடைப்பிடிக்க  வேண்டும் எனவும் தனது ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கேட்டுக்கொண்டார்.

Comments