கணவரால் தாக்கப்பட்டு மனைவி கொலை!

மாத்தளை, அகலவத்தை குடியேற்ற பகுதியில் கணவரால் தாக்கப்பட்டு மனைவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு வலுவடைந்ததை அடுத்து, கணவன் கோடரியால் மனைவியை தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 18 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளார்.

அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Comments