முள்ளிப்பொத்தானை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர் கைது
திருகோணமலை தம்பலகமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அடையாள அட்டை மற்றும் தன்னை உறுதிப்படுத்தும் எந்த ஆதாரங்களும் இன்றி சந்தேகத்திற்கிடமான முறையில் ஊருக்குள் உலாவித்திரிந்த நபர் ஒருவரை இம்மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க நேற்று திங்கட்கிழமை (5) உத்தரவிட்டார்.
குறித்த சந்தேக நபர் குருணாகல் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பாதையில் வீடுகளை பார்த்து நடமாடியதால் பிரதேச மக்கள் பொலிஸ் அவசரப் பிரிவிற்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை (4) கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரை பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.சம்பவம் தொடர்பான விசாரணைகளை தம்பலகமம் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Comments
Post a Comment