வடக்கு முதல்வருக்கு எதிராக பொதுபலசேனா ஆர்ப்பாட்டம்
எழுக தமிழ் பேரணியின்போது வடமாகாண முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் முன்வைத்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுபலசேனா அமைப்பின் தலைமையில் பல அமைப்புகள் ஒன்றிணைந்து இன்று வவுனியாவில் மாமடுவ சந்தியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தன.
வடக்கு கிழக்கில் சிறுபான்மையாக வாழும் சிங்கள மக்களின் பாதுகாப்பை பலப்படுத்தி பெளத்த கொள்கைகளை நாட்டில் நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதாக ஆர்ப்பாட்டத்திலீடுபட்டோர் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் வடக்கில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில், சிங்கள ராவய, ராவணா பலய ஆகிய அமைப்புகளையும் இணைத்துக்கொண்டு இன்று வவுனியா மாவடுவ சந்தியில் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment