பொலிஸ் நிலையத்தில் தீ கம்பஹாவில் சம்பவம்!
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் அறைக்குள் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக கம்பஹா வீரங்குல பொலிஸ் நிலையத்தில் இன்று மாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்புப்படையினர் மற்றும் பொலிசாருடன் இணைந்து பொதுமக்களும் தீ அணைப்பு முயற்சிகளில் ஈடுபட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதன் போது அனர்த்தம் காரணமாக ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் இதுவரை மதிப்படப்படவில்லை என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


Comments
Post a Comment