இரட்டைக்கொலை: விசாரணையில் திடீர் திருப்பம்!
ஏறாவூர் இரட்டைக் கொலை சம்பவத்தோடு நேரடியாக தொடர்புபட்டுள்ள கொலையாளி தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளும் இரத்தக் கறைகளுடனான உடைகளும் திருகோணமலை முள்ளிப்பொத்தானையில் உள்ள 10ஆம் கொலனி வீடொன்றிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏறாவூர் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் ஈஸாலெப்பை பதூர்தீன் தலைமையிலான குழுவினர் நேற்று நடத்திய தேடுதலில் குறித்த தடயப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஏறாவூருக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ள குறித்த தடயப் பொருட்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கொலைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் கொலையாளிகளால் திருடப்பட்ட நகைகள் மூதூர், கந்தளாய், முள்ளிப்பொத்தானை போன்ற இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Comments
Post a Comment