இந்தியாவிற்கு ஆப்பு வைத்த இலங்கை: தடுமாற்றத்தில் த.தே.கூ ?

சம்பூர் அனல் மின்சார மையத்திட்டம் முன்னெடுக்கப்படாது என்ற தகவல் இன்னும் இந்தியாவிடம்  உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய மத்திய அரசு ஆவலுடன் கிழக்கு பகுதியில் உள்ளள திருக்கோணமலை பகுதியில் உள்ள பிரதேசமான சாம்பூரை தன்வசப்படுத்த 2009ஆம் சம்பூரில் அனல் மின்சார மையத்தை அமைப்பதற்கான யோசனையை முன்வைத்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் அந்த திட்டத்தை இந்தியாவிடம் கையளித்தது.

இதற்காக உடன்படிக்கைகளும் செய்துக்கொள்ளப்பட்டன.

எனினும் அங்குள்ள மக்களாலும் சூழலியலாளர்களாலும் காட்டப்பட்ட எதிர்ப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உதாசீனம் செய்த போதும் மக்களின் தனிமுயற்சியும் போராட்டமும் உயர் நீதிமன்றத்தில் சமர்பித்த நியாயபூர்வ ஆவணங்களும் பரிசீலனை செய்ய தயாரான உச்ச நீதிமன்றத்தின் செயற்பாடுகளினால் சட்டமா அதிபர் தினைக்களத்தின் எழுத்து பூர்வமான ஆவனத்தில் குறிப்பிட்ட விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் , அந்த திட்டம் கைவிடப்படுவதாக  அரசு அளித்த உத்தரவாதத்தை ஏற்று கொண்டது.

இதன் காரணமாக சாம்பூர் அனல்மின்சார திட்டத்தை அரசால் நீதிக்கு அமைய செயல் படுத்தமுடியாது என அறிவித்துவிட்டது.

இந்த நிலையில் இந்திய அரசுக்கு  இது குறித்து அறிவிக்கப்படவில்லை என்று இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

Comments