BREAKING NEWS.. துமிந்த சில்வா உட்பட ஐந்து பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
ஷிராண் குணரட்ன, பத்மினி என் ரணவக்க, என்.சி.பி.சி. மொராயஸ் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாம் முன்னிலையில் வழக்கு விசாரணை இடம்பெற்றது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 13 பேரில் 11 ஆவது சந்தேநபரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா 2013 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி முதல்தடவையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலையுடன் தொடர்புபட்ட 13 சந்தேக நபர்களில்
*துமிந்த சில்வா
*அநுர துஷார டி மெல்,
*தெமட்டகொடை சமிந்த,
*சரத் பண்டார,
*பிரியந்த ஜானக பண்டார
ஆகிய ஐந்து பேருக்கும் மரணதண்டனை விதிக்கபப்ட்டுள்ளது.

Comments
Post a Comment