Flash News.. ஒரு கோடியுடன் காணாமல் போன வர்த்தகர் மொஹமட் நஸ்ரின் கைது.

பண்டாரகம பகுதியைச் சேரந்த மொஹமட் நஸ்ரின் என்பவர் திருகோணமலைக்கு ஒரு கோடி பணத்துடன் சென்று காணாமல்போன நிலையில், அது தொடர்பில் 20 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டும், நகரின் CCTV கள் பரிசோதனை செய்யபட்டும் விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் பல முரண்பட்ட  தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் சற்றுமுன்னர் வெளியான செய்தியின் படி, காணாமல் போனதாக கூறப்பட்ட மொஹமட் நஸ்ரின் நேற்று மாலை யாழில் வைத்து  கைது செய்யப்பட்டதாக திருகோணமலை போலிஸ் அறிவித்து இந்த சம்பவத்தில் திருப்பத்தை உண்டாக்கி உள்ளது.

யாழில் இருந்து நண்பர் ஒருவரின் தொலைபேசிக்கு இவர் ஏற்படுத்திய அழைப்பு தொடர்பில் போலீசார் மேற்கொண்ட விசாரணையிலே இவர் கைது செய்யபபட்டு திருகோணமலை போலிசுக்கு அசித்து வரப்பட்டுள்ளார்.

Comments