(Video இணைப்பு) யுவதி மீது இளைஞர்கள் இணைந்து மூர்க்கத்தனமாக தாக்குதல்.

குருணாகல் பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் பெண் ஒருவர் மீது சிலர் கொடூரமாக தாக்குதல் மேற்கொண்டுள்ள காணொளி ஒன்று சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
குறித்த பெண் மாத்திரமின்றி அவருடன் இருந்த மற்றுமொரு நபரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
யாசகம் செட்ட ஒருவருக்கு எச்சில் துப்பியதால் அதனை அவதானித்த பிரதேச இளைஞர்கள் அப்பெண்ணை தாக்கியதாக சம்பவத்தை நேரில் கண்டதாக கூறும் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நடுவீதியில் பெண்ணொருவர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டமைக்கு சமுக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் வெளிவந்தவாறு உள்ளன.

Comments
Post a Comment