உயர்தர பரீட்சை பெறுபேற்றுக்குரிய Z-Score வெளியானது! 

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த வெட்டுப்புள்ளிகளின் முடிவுகளை http://www.ugc.ac.lk/ என்ற  இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் மாவட்ட ரீதியாக  இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை கடந்தஆண்டை விட 10 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொகான் டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 27,603 மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

Comments