கல்முனை ஸாஹிராவின் நினைவுகளை மீண்டும் காண்போம்; “ZAHIRIAN EID FIESTA 2016”



.za8
கல்முனை ஸாஹிரா கல்லூரியில் கல்வி கற்று இன்று உலகின் நாலா பகுதிகளிலும் பரந்து வாழும் எமது பழைய மாணவர்களினை ஒன்றிணைக்கும் முயற்சியாக ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 16.09.2016 வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு மாபெரும் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வு ஸாஹிராவின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சகல பழைய மாணவர்களினதும் கவன ஈர்ப்பினை கல்லூரியின் மீது கொள்ளும் பொருட்டும் தங்கள் கல்வி கற்ற பாடசாலையினை மீள வந்து தரிசிக்கும் வாய்ப்பினை பழைய மாணவர்களுக்கு வழங்கும் நோக்கிலும் இந்நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபரும் பழைய மாணவர் சங்கத்தின் தலைவருமான பி.எம்.எம். பதூர்டீன் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் கமால் நிஷாத் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஸாஹிரா கல்லூரி இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் பல்வேறு தடயங்களினை உருவாக்கியுள்ளது. ஏறக்குறைய 70 ஆண்டு கால கல்வி சேவையில் அழியாத பல தடங்களை பதித்து முன்னேறிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் அதன் பழைய மாணவர்களை இந்த கல்லூரியின் பழைய நினைவுகளை மீட்டி பார்க்கும் சந்தர்ப்பமாக இது கருதப்படுகிறது.
இந்நிகழ்வில் பழைய மாணவர்கள் குடும்பமாக கலந்து மகிழும் வகையில் சிறுவர் நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகள், கல்லூரியின் குறிப்பிடத்தக்க அடைவுகளை கௌரவிக்கும் நிகழ்வுகளுடன் இராப்போசன ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
நீங்கள் கல்வி கற்ற பாடசாலை, உங்களை உருவாக்கிய பாடசாலை, உங்களை ஒழுங்கமைத்த பாடசாலை, அத்துடன் உங்களது வகுப்பறை அனுபவங்கள் கல்லூரியின் மறக்கவொண்ணா நிகழ்வுகள் தங்களுக்குள் மீண்டும் ஒருமுறை நினைவூட்டிப்பார்க்கும் உங்கள் மீள்வருகை நல்லதோர் சிறப்பு நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிகழ்வு வரையறுக்கப்பட்ட ஆசனங்களை கொண்டிருப்பதால் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களை முற்பதிவு செய்து கொள்ள நுழைவு சீட்டினை பெற்று உறுதி செய்து கொள்ளமுடியும் எனவும் இது தொடர்பில் மேலதிக விபரங்களுக்கு 0771094058 இலக்கத்தினை தொடர்புகொள்ளுமாறும் செயலாளர் தெரிவித்துள்ளார்.
za

Comments