படையினரால் விடுவிக்கப்பட்ட புல்மோட்டை அரிசிமலை 03 வீடுகளுக்கு முஸ்லிம்கள் விஜயம்

புல்மோட்டை அரிசிமலை பிரதேசத்தில் கடந்த 2004 ம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட மூவருக்கு நிஹாப் அரச சார்பற்ற நிறுவனத்தால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீட்டினை கடந்த 2008ம் ஆண்டு காலப்பகுதியில் கடற்படையினர் ஆக்கிரமித்து வந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதமளவில் ஜப்பார் காலித் என்பவரின் வீடு விடுவிக்கப்பட்ட நிலையில் 24.10.2016 (திங்கள்) இன்று கடற்படையினர் உத்தியோகபூர்வமாக குச்சவெளி பிரதேச செயலாளர் தனேஸ்வரன் குறித்த பகுதிகாக்கான கிராம சேவகர் சியாம் காணி உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு உரியவர்களுக்கான காணிகள் வீட்டுடன் அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வீட்டு உரிமையாளர்களான ஜவ்பெர் முத்தலிப் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டன

பின்னர் விடுவிக்கப்பட்ட பகுதியை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் உரியவர்களுடன் சென்று பார்வையிட்டனர்.

குறித்த வீட்டினையும் குடியிருப்புக்கு காணியினையும் படையினரிடமிருந்து மீட்பதற்காக முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக இவ்வீடுகள் மீண்டும் கிடைக்கப் பெற்றுள்ளன.

 கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் , பிரதேச முன்னாள் உதவி தவிசாளர் ஏ.பி.தௌபீக் உட்பட புல்மோட்டை பிரதேச பள்ளிவாசல் தலைவர் பிரதேசத்தின் ஒரு சில முக்கியஸ்தர்களும்  குறித்த பிரச்சினை தொடர்பாக இன்னும் நீதிமன்ற வழக்கில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Comments