மூதூர் மனாருல் ஹுதா பெண்கள் அரபுக்கல்லூரியின் 10வது பட்டமளிப்பு விழா
மூதூர் மனாருல் ஹுதா பெண்கள் அரபுக்கல்லூரியின் 10வது பட்டமளிப்பு விழா இன்று (16) கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.இதில் 11 பேர் மௌலவியா பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்..
இதன் போது குறித்த பெண்கள் அராபுக் கல்லூரியில் 25 வருடங்கள் அதிபராக கடமை புரிந்து இன்றுடன் ஓய்வு பெற்றுச் செல்லும் எம்.பஹார்தீன் மௌலவி அவர்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீர் அவர்களினால் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன் பழைய மாணவிகள் அதிபருக்கு பொற்கிளியும் வழங்கி கௌரவித்தனர்.
இதில் பிரதம அதீதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீர் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதீதிகளாக மூதூர் நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி ஹரீம், கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் எம்.ஹிதாயத்துல்லா (நளீமி) ,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பிரதிச் செயலாளர் ஜே.எம்.ஹுஸைதீன் போன்றோரும் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment