மதுபோதையில் 12 பேர கைது: மோதலில் இருவர் வைத்தியசாலையில்
திருகோணமலை நகரில் இடம் பெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் மது போதையில் கைது செய்ய்ப்பட்ட 12 நபர்களையும் ஒரு இலட்சம் ரூபாய் வீதம் சரீர பிணையில் செல்லுமாறு இன்று (31) திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணறாஜா உத்தரவிட்டார்.
திருகோணமலை நககரை அண்மித்த விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற களியாட்ட நிகழ்வின் போது மது அருந்திவிட்டு பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 12 பேரையும் பெப்ரவரி மாதம் 21ம் திகதி நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Comments
Post a Comment