இலங்கையில் புதிதாக அறிமுகமாகும் 1500 நாள் வேலைத்திட்டம்!

எதிர்வரும் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவு திட்டத்திற்கு முன்னர் 1500 நாள் அபிவிருத்தி கொள்கை திட்டத்தை வெளியிடுவதற்கு அரசாங்கம் தயாராகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் இதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் , ஜனாதிபதியின் வறுமை ஒழிப்பு திட்டத்தினை விஸ்தரிக்கவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் 4 வருட கால அபிவிருத்தி திட்டங்களை அடிப்படையாக வைத்து   1500 நாள் அபிவிருத்தி கொள்கை திட்டம்  ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின்  தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த கொள்கை திட்டத்தில் நாட்டின் அனைத்து துறைகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.

2017 ஆம் ஆண்டின் வரவு – செலவு திட்டம் அடுத்த மாதம் 10 ஆம் திகதி சமர்பிக்கப்பட உள்ள நிலையில் , அதற்கு முன்னர் 1500 நாள் அபிவிருத்தி கொள்கை திட்டத்தை அறிவிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார் .

இதற்கு அமைவாக உத்தேச பொருளாதார கொள்கை திட்டம் இம் மாத இறுதிக்குள் முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.

Comments