16 வயது சிறுமி கடத்தல்!
பொகவந்தாலாவை பொகவானை தோட்டத்தைச்சேர்ந்த 16 வயது சிறுமி கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக வகுப்புக்காக சென்ற சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறப்பட்டு முச்சக்கர வண்டியில் கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.
அக்குரண பிரதேசத்திற்கு அவர் கடத்திச்செல்லப்பட்டிருப்பதாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.
மேற்படி கடத்தல் சம்பவமானது நேற்று முன்தினம் காலையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தினத்தில் குறித்த சிறுமி மேலதிக வகுப்புக்காக செல்வதாக கூறிச்சென்றவர் மீண்டும் வீடுதிரும்பாததையடுத்து தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும் சிறுமியை காணக்கிடைக்காததால் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சிறுமியை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் நோக்கில் ஆசை வார்த்தை பேசி இவ்வாறு முச்சக்கர வண்டியில் கடத்தி செல்லப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அக்குரணை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டிருப்பதாகவும் தேடுதல், விசாரணை நடவடிக்கைகளுக்காக பொலிஸ் குழு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித் தனர்.

Comments
Post a Comment