சுதந்திர கட்சியுடன் இணையும் 19 அரசியல் கட்சிகள் கூட்டணி!
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிட 19 அரசியல் கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
ஆறுமுகம் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உட்பட 19 அரசியல் கட்சிகளும், சிறு கட்சிகள், சிவில் அமைப்புக்கள் பலவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளன.
இதனால், எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பலமான ஒரு கூட்டணியாக களமிறங்குவதனால் வெற்றி குறித்த எந்தப் பயமும் இல்லையெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Comments
Post a Comment