நாமல் ராஜபக்ச 200 மில்லியன் கோரி வழக்கு தாக்கல்!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கெதிராக இரண்டு வழக்குகளை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

நிதிமோசடி விசாரணைப் பிரிவினர் 200 மில்லியன் ரூபா நஷ்டஈடு தனக்கு வழங்க வேண்டுமென்று கோரியே நாமல் ராஜபக்ஷ வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தின் நிதியை மோசடி செய்ததாக தெரிவித்து நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கைதுசெய்தமைக்கு எதிராக  குறித்த வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments