மருதமுனை கோல்ட்மைன்ட் பிறீமியர் லீக் உதைபந்தாட்டப் போட்டித் தொடர் 2016

மருதமுனை கோல்ட்மைன்ட் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பிறீமியர் லீக் உதைபந்தாட்டப் போட்டிகளும் 41 வது வருடாந்த நிகழ்வுகளும் மருதமுனை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலய மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை(18.10.2016)மாலை 3.30 மணியளவில் கோலாகலமாக அரங்கேறியது.

மருதமுனை கோல்ட்மைன்ட் விளையாட்டுக் கழகத்தின் ஐம்பதிற்கும் அதிகமான வீரர்கள் நான்கு சம பல அணிகளாக பிரிக்கப்பட்டு அணிக்கு எழுவர் கொண்ட உதைபந்தாட்டத் தொடராக இது இடம்பெற்றது.நான்கு அணிகளுக்கும் கோல்ட்மைன்ட் ஸ்டோர்ம் கிங்ஸ், கோல்ட்மைன்ட் பயர் பேர்ட்ஸ், கோல்ட்மைன்ட் வின்ட்ஸ் பார்க், கோல்ட்மைன்ட் ஸ்பீட் ரைடர்ஸ் என பெயர் சூட்டப்பட்டது.

நான்கு அணிகளும் லீக் அடிப்படையில் முதல் சுற்றில் மோதுகின்றன. ஆதிக புள்ளிகளைப் பெறுகின்ற இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

இளம் வீரர்களை ஊக்குவிக்கும் முகமாக இப்போட்டித் தொடர் அமைந்திருப்பதுடன் கோல்ட்மைன்ட் ரசிகர்களுக்கும் பெரு விருந்தாக அமைந்தது. ஆரம்ப நாள் நிகழ்வுகளை கழகத்தின் பொதுச் செயலாளர் ஏ.எம்.றியாஸ் ஜே.பி அவர்கள் நெறிப்படுத்தினார். ஆரம்ப நாள் நிகழ்விலே விஷேட விருந்தினராக கழகத்தின் ஸ்தாபகர் மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.ஏ.ஜமால் முஹம்மட் ஜே.பி அவர்களும் கௌரவ விருந்தினர்களாக கழக மீயுயர்பீட உறுப்பினர்களான ஆசிரியர்கள் எம்.பி.எம்.றசீட், எம்.ஏ.எம்.அஸ்வர், எம்.எச்.எம்.நசீல் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

ஆரம்பப் போட்டியாக இடம்பெற்ற முதலாவது போட்டியிலே கோல்ட்மைன்ட் ஸ்டோர்ம் கிங்ஸ், கோல்ட்மைன்ட் பயர் பேர்ட்ஸ் ஆகிய அணிகள் மோதிக் கொண்டன. இப்போட்டி 2-2 என்ற கோல் அடிப்படையில் சமநிலையில் முடிவுற்றது. இரண்டாவது போட்டியிலே கோல்ட்மைன்ட் வின்ட்ஸ் பார்க், கோல்ட்மைன்ட் ஸ்பீட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதிக் கொண்டன இப்போட்டியில் கோல்ட்மைன்ட் ஸ்பீட் ரைடர்ஸ் அணி 3-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது.

மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். போட்டிக்கு நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்களான ஜே.பாதுஷா மற்றும் எஸ்.எம்.உபைதீன் ஆகியோர் கடமையாற்றினர்.

மேற்படி போட்டித்தொடரின் இறுதிப்போட்டியும் பரிசளிப்பு விழாவும் கழகத் தலைவர் தொழிலதிபர் அல்ஹாஜ் வை.கே.ரஹ்மான் அவர்களின் தலைமையில் எதிர்வரும் வாரம் மின்னொளியில் இடம்பெறவுள்ளது.





Comments