2017:அரசின் மொத்த செலவீனம் ரூ 1819 பில்லியன்
2017 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சபையில் சமர்ப்பித்ததுடன் அரசாங்கத்தின் மொத்த செலவீனமாக 1819 பில்லியன் 5 மில்லியன் 44 ஆயிரம் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இம்முறை நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தில், கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, கமத்தொழில் ஆகிய அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளன. அதேநேரம், வீடமைப்பு, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு, நிதி அமைச்சு, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு என்பவற்றுக்கான நிதி ஒதுக்கீடும், ஜனாதிபதிக்கான ஒதுக்கீடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் ஊடாக அரசாங்கத்துக்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கான கடன் எல்லை 1489 பில்லியன் 250 மில்லியன் 436 ஆயிரம் ஆக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடியது. சபாநாயகர் அறிவித்தல்களைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சபையில் சமர்ப்பித்தார். ஐந்து நிமிடங்கள் மாத்திரமே சபை அமர்வுகள் இடம்பெற்றன. நிதி அமைச்சர் சமர்ப்பித்த நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் 2017ஆம் ஆண்டு கல்விக்கான ஒதுக்கீடு 10 ஆயிரத்து 903 கோடியே 29 இலட்சத்து 11 ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் கல்வி அமைச்சுக்காக 185,976,630,000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்தபோதும் இம்முறை 76,943,719,000 ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சுக்கான ஒதுக்கீடு 1310 கோடியே 61 இலட்சத்து 69 ஆயிரத்தினால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சுக்காக கடந்த வருடம் 174,077,998,000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் இம்முறை 160,971,829,000 ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 2261 கோடியே 34 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு கடந்த வருடம் 306,657,824,000 ரூபா ஒதுக்கப்பட்டபோதும், இவ்வருடம் 284,044,344,000 ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடும் இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் குறைக்கப்பட்டிருப்பதோடு, இது 801 கோடியே 51 இலட்சத்து 42ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த அமைச்சுக்கு 171,419,880,000 ரூபாவும், இம்முறை 163,404,738,000 ரூபாவுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
கமத்தொழில் அமைச்சுக்கு இம்முறை 11,394,174,000 ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த முறை இந்த அமைச்சுக்கு 54,201,212,000 ரூபா ஒதுக்கப்பட்டது. இதன்படி கமத்தொழில் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 4280 கோடியே 70 இலட்சத்து 38 ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வீடமைப்பு அமைச்சுக்கு கடந்த வருடத்தைவிட 44 கோடியே 44 இலட்சத்து 6 ஆயிரம் ரூபா மேலதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த அமைச்சுக்கு 2,823,400,000 ரூபாவே ஒதுக்கப்பட்டது. ஆனால் அடுத்த நிதியாண்டுக்காக வீடமைப்பு அமைச்சுக்கு 3,267,806,000 ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு கடந்த வருடத்தைவிட 268 கோடியே 4 இலட்சத்து 86 ஆயிரம் ரூபா மேலதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சுக்கு கடந்த வருடம் 686,820,000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்தபோதும், இம்முறை 3,367,286,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சுக்கு இம்முறை 17,441,414,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் கடந்த வருடம் இவ்வமைச்சுக்கு 3,780,130,000 ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய இம்முறை கூடுதலாக 136 கோடியே 612 இலட்சத்து 84 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ்வரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 2016 ஆம் நிதியாண்டுக்கான செலவினமாக 1,219 கோடியே 23 இலட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் இம்முறை 12,543,197,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி மேலதிகமாக 34 கோடியே 8 இலட்சத்து 47 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சுக்கும் இம்முறை கடந்தவருடத்தைவிட 13497 கோடியே 32 இலட்சத்து 15ஆயிரத்து 500 ரூபா கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த அமைச்சுக்கு கடந்த வருடம் 107,833,235,500 ரூபாவும், இந்தவருடம் 242,806,451,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
வெ ளிவிவகார அமைச்சுக்கு இம்முறை நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் ஊடாக 9,689,139,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இந்த அமைச்சுக்கு 9,469,205,000 ரூபாவே ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய 21 கோடியே 99 இலட்சத்து 34 ஆயிரம் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு இம்முறை 44,542,850,000 ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் அதேவேளை, கடந்த வருடம் 32,638,000,000 ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. 1190 கோடியே 48 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய கலந்துரையாடல்கள் பற்றிய அமைச்சுக்கு இம்முறை 679,593,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். கடந்த வருடம் ஜனாதிபதிக்கு 2,392,075,000 ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 2017ஆம் ஆண்டுக்காக இவருக்கு 6,452,679,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவருக்கு மேலதிகமாக 406இகோடியே 6 இலட்சத்து 4 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதமருக்காக 1,355,271,000 ரூபாவும், எதிர்க்கட்சித் தலைவருக்காக 84,088,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
2017ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) மீதான இரண்டாவது வாசிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. வரவுசெலவுத்திட்ட உரையை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆற்றவுள்ளார். 11ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதிவரை 26 நாட்கள் வரவுசெலவுத்திட்ட விவாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments
Post a Comment